ரௌத்திரம், சந்தோஷம், துக்கம்,

இவை அனைத்தும் அந்த பேணா முனைக்குள் ஓழிந்திருக்கிறது.

நானும் கண்ணாமுச்சி ஆடத் தயார்

எழுத்துக்களோடு.

கண்ணீராக இருந்தால்க் கூட அது எழுத்து வடிவில் பிரதிபலிக்கட்டும்.

வெளிச்சம் என்ற மாயையை

ஒரு முறை தொட்டுவிட்டு வருகிறேன்.

அதுவரை தொடரட்டும்

இந்த முடிவிலாப் பயணம்.

ஒரு வேலை தோல்வி அடைந்தால்க்கூட

இருள் காத்திருக்கும்

என்னை அரவணைக்க.